தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளக்குறிச்சியில் 'நல்லாசிரியர் விருது' பெற்ற 9 பேர்

கள்ளக்குறிச்சியில் நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட ஒன்பது ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ தர் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

கள்ளக்குறிச்சியில் 'நல்லாசிரியர் விருது' பெற்ற 9 ஆசிரியர்கள்
கள்ளக்குறிச்சியில் 'நல்லாசிரியர் விருது' பெற்ற 9 ஆசிரியர்கள்

By

Published : Sep 6, 2021, 4:07 PM IST

கள்ளக்குறிச்சி: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி குடியரசு முன்னாள்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழா, ஆசிரியர் நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் கல்விப் பணியில் சிறப்பாகப் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு ’நல்லாசிரியர் விருது’ தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது.

கரோனா பரவல் காரணமாக அந்தந்த மாவட்டகளில் மாவட்ட ஆட்சியர்கள் விருதுகளை வழங்குவார் என அறிவிக்கப்பட்டது. இந்தாண்டு 389 ஆசிரியர்கள் விருது பெற்றுள்ளனர்.

9 ஆசிரியர்களுக்கு விருது

அந்தவகையில் இன்று (செப். 6) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் 2020-2021ஆம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, காசோலை வழங்கி கௌரவித்தார்.

கள்ளக்குறிச்சியில் 'நல்லாசிரியர் விருது' பெற்ற 9 ஆசிரியர்கள்

மேலும், சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு விருது வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா, அரசு அலுவலர்கள், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எனப் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதையும் படிங்க: 13 பேருக்கு நல்லாசிரியர் விருது - ஆசிரியர்களை கெளரவித்த மாவட்ட ஆட்சியர்

ABOUT THE AUTHOR

...view details