தமிழ்நாடு

tamil nadu

ரூ.38 கோடியில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு!

By

Published : Feb 24, 2021, 5:30 PM IST

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் ரூ.38 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (பிப்.23) காணொலி மூலமாக திறந்துவைத்தார்.

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்குள்பட்ட சென்னை டூ சேலம் நெடுஞ்சாலை அருகில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பாதாள சாக்கடை திட்டம் மூலம் ரூ.38 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்தச் சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலமாக திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுப்பாட்டு அறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை அதிமுக நகர செயலாளர் எஸ். துரை கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கிவைத்தார்.

உளுந்தூர்பேட்டையில் கட்டுப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

இந்நிகழ்ச்சியில் கழிவுநீர் வடிகால் வாரியத்தின் பொறியாளர்கள், அலுவலர்கள் அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் மணிராஜ், பழனிவேல், முன்னால் ஒன்றிய துணை தலைவர் சாய்ரம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு கரோனா சோதனை கட்டாயம்

ABOUT THE AUTHOR

...view details