தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலம்- விருத்தாசலம் ரயில் பாதையில் விரைவில் மின்சார ரயில் சேவை தொடக்கம் - சேலம் - விருதாச்சலம் இடையே மின்சார ரயில்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் ஆய்வு செய்தார். அப்போது சேலம் முதல் விருத்தாச்சலம் வரை 156.கிமீ மின்மயமாக்கப்பட்ட ரயில்வே இருப்புப் பாதையில் விரைவில் மின்சார ரயில் இயக்கப்படும் என தெரிவித்தார்.

Chinnasalem train inspection  chinnasalem to virruthasalam train will be stars soon  chinnasalem to virruthasalam electric train trail  சின்னசேலத்தில் தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு  சேலம் - விருதாச்சலம் இடையே மின்சார ரயில்  ரயில் சோதனை ஓட்ட ஆய்வு
சேலம்- விருத்தாசலம் மின்சார ரயில் விரைவில் தொடக்கம்

By

Published : Dec 28, 2021, 12:26 PM IST

கள்ளக்குறிச்சி: சேலம் - விருதாச்சலம் இடையே மின்சார ரயில் இயக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு சேலம் முதல் விருதாச்சலம் வரை மின்சார ரயில் இயக்குவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

தற்போது பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில், சேலத்தில் இருந்து விருதாச்சலம் வரை 156 கிலோமீட்டர் மின்சார ரயில் இயக்க உள்ளதால் அதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.

ரயில் சோதனை ஓட்ட ஆய்வு

இந்த சோதனை ஓட்டத்தை தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் இன்று ஆய்வு செய்தார். அப்போது மின்சார ரயில் இயக்குவதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்து உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம் சீனிவாஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சேலம் - விருத்தாச்சலம் இடையே மின்சார ரயில் பாதை பணிகள் முடிவடைந்துள்ளது. விரைவில் ரயில் இயக்குவதற்கான பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

ஆய்வின் போது, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம் சீனிவாஸ் மற்றும் ரயில்வே துறை உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:CM Speech: நமக்குள் உள்ளது தேர்தல் உறவு அல்ல கொள்கை உணர்வு; தா.பாண்டியனுக்கு ஸ்டாலின் புகழஞ்சலி...

ABOUT THE AUTHOR

...view details