தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமிக்குத் திருமணம்: போக்சோவில் ஒருவர் கைது! - kalakuruchi district news

கள்ளக்குறிச்சி: ஆசைவார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்துகொண்ட நபரை காவல் துறையினர் போக்சோவில் கைதுசெய்தனர்.

One arrested in Pokmon
One arrested in Pokmon

By

Published : Oct 15, 2020, 10:15 AM IST

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள க. மாமனந்தல் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 9ஆம் தேதி மாயமானார். இதையடுத்து, சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், இளவனாசூர்கோட்டை அருகே உள்ள புகைப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் முத்து (27) என்பவர் ஆசைவார்த்தை கூறி சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து முத்துவை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: சொத்துத் தகராறில் தலைமைக் காவலரின் மனைவிக்கு கத்திக்குத்து

ABOUT THE AUTHOR

...view details