கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் பள்ளி மாணவி சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்ததாகக் கூறி பொதுமக்கள் பெரும்கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்த ஏராளமான காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.
ஆனால், காவல் துறையினரின் தடுப்பையும் மீறி மக்கள் பள்ளி வளாகத்திற்குள் சென்று பள்ளி வாகனத்திற்கு தீ வைத்து, பள்ளியில் இருந்த பொருள்களை உடைத்து நாசம் செய்தனர். மேலும், அங்கிருந்த காவல் துறையினரின் வாகனத்திற்கும் தீ வைக்கப்பட்டது.
தொடர்ந்து, பாதுகாப்பிற்கு வந்த காவல் துறையினரையும் தாக்கத் தொடங்கினர். இந்தத் தாக்குதலில் காவலர் மணிகண்டன் உள்பட பல காவல்துறையினர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட சக காவலர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவனையில் சேர்த்தனர்.
இந்நிலையில், தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் காவலர் மணிகண்டனிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நலம் விசாரித்தார். அதன் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.
காவலரிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின் இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறப்பதற்கு முன் எழுதியதாக வைரலாகும் கடிதம்!