கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதிதாக ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் கோயில் கட்டப்பட உள்ளது. இந்தக் கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டையில் திருப்பதி தேவஸ்தான கோயில் - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் அமையவுள்ள திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர கோயில் கட்டுமானப் பணிகளைத் தொடங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
Chief Minister lays the foundation stone for Tirupati Sri Venkateswara temple
இதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள், உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.