தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளை மீட்டுதரக்கோரி தந்தை ஆட்கொணர்வு மனு!

கள்ளக்குறிச்சி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு, தனது மகளை கடத்தி சென்றுவிட்டதால் மகளை மீட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்த உத்தரவிடக்கோரி, பெண்ணின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

challenge mla prabu marriage in chennai high court
challenge mla prabu marriage in chennai high court

By

Published : Oct 5, 2020, 9:00 PM IST

Updated : Oct 5, 2020, 11:08 PM IST

கள்ளக்குறிச்சி:மகளை மீட்டுத் தர செளந்தர்யாவின் தந்தை நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியின் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரான பிரபு, சௌந்தர்யா என்ற கல்லூரி மாணவியை இன்று (அக். 5) திடீரென திருமணம் செய்துகொண்டார். இச்சூழலில், இவருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தியாகதுருகத்தைச் சேர்ந்த பெண்ணின் தந்தையான சுவாமிநாதன், ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், “தனது மகள் செளந்தர்யா, திருச்செங்கோட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.ஏ இரண்டாமாண்டு படித்து வருவதாகவும், தன்னுடைய மகளை கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு ஆசைவார்த்தைகள் கூறி, கடத்திவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

சக்சஸ் ஆன 4 மாத காதல் - எம்.எல்.ஏ பிரபு பிரத்யேகப் பேட்டி!

இது குறித்து காவல் துறையில் புகாரளித்தும், ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் என்பதால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புகாரளித்ததால் தனக்கு மிரட்டல் விடுக்கப்படுவதால், தனது மகளை மீட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்த காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated : Oct 5, 2020, 11:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details