தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊராட்சித் தலைவரை சாதி ரீதியாக அவமானப்படுத்திய விவகாரம்: காவல் துறை வழக்குப்பதிவு! - ஊராட்சி மன்றத் தலைவரை தரையில் அமரவைத்த விவகாரம்

மயிலாடுதுறை: மன்னம்பந்தல் ஊராட்சி மன்றத் தலைவரை சாதி ரீதியாக அவமானப்படுத்திய விவகாரத்தைத் தொடர்ந்து, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர், அவரது கணவர்மீது மயிலாடுதுறை காவல் துறையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை

By

Published : Oct 13, 2020, 2:22 PM IST

Updated : Oct 13, 2020, 7:46 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியம் மன்னம்பந்தல் ஊராட்சியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட 23 வயது பட்டதாரி பெண் பிரியா பெரியசாமி.

ஊராட்சிமன்றத் தலைவராக வெற்றிபெற்று பொறுப்பு வகித்துவருகிறார். இந்நிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு உறுப்பினர்கள் ஒப்புதல்பெற்று தளவாட பொருள்கள் வாங்கியுள்ளார்.

அதில் ஊராட்சி மன்றத் தலைவருக்கு ரோலிங் சேர் வாங்கியதற்கு ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் அமலா ராஜகோபால் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், பட்டியலின பெண்ணுக்கு ரோலிங் சேரா என்று ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் கணவர் ராஜகோபால் கேவலப்படுத்தியதாகவும், தொடர்ந்து ஊராட்சிக்கு வளர்ச்சித் திட்டங்கள் செய்வதற்கு உண்டான நிதியை பெறுவதற்கு கமிஷன் தொகை கேட்டு கையெழுத்திட மறுப்பதாகவும் குற்றஞ்சாட்டி மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் அமர்ந்து பிரியா பெரியசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இச்சம்பவம் அறிந்த கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அங்கு கூடினர். இதைத் தொடர்ந்து பிரியாவிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில், மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் விசாரணை செய்து துறைரீதியாக நிதியைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து 3 மணிநேரமாக நடத்திய போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஊராட்சி துணைத் தலைவர் அமலா, அவரது கணவர் ராஜகோபால் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார்.

இதையடுத்து மயிலாடுதுறை காவல் துறையினர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் அமலா, அவரது கணவர் ராஜகோபால் ஆகிய இருவர் மீதும் புகார் அளித்தார். இதையடுத்து அவர்கள் மீது காவல் துறையினர் நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடிவருகின்றனர்.

Last Updated : Oct 13, 2020, 7:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details