தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சங்கராபுரம் பட்டாசு கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு! - kallakurichi latest news

கள்ளக்குறிச்சி சங்கராபுரத்தில் பட்டாசு கடை தீ விபத்து தொடர்பாக கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சங்கராபுரம்
சங்கராபுரம்

By

Published : Oct 28, 2021, 11:22 AM IST

Updated : Oct 28, 2021, 12:17 PM IST

கள்ளக்குறிச்சி : சங்கராபுரத்திலுள்ள பட்டாசு கடையில் அக்டோபர் 26ஆம் தேதி மாலை எதிர்பாராத விதமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஏழு பேர் உயிரிழந்தனர். தீக்காயமடைந்த 8 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பட்டாசு கடை உரிமையாளரான பாஜக நிர்வாகி மீது சுந்தராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பட்டாசு கடையில் அரசின் அனுமதியை மீறி அதிக அளவிலான பட்டாசுகள் வைத்திருந்தது, பட்டாசு தீ விபத்துக்கு காரணமானவர் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கடை உரிமையாளரான பாஜக நிர்வாகி செல்வகணபதி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வழக்குப்பதிவு செய்யப்பட்ட பட்டாசு கடை உரிமையாளரான செல்வகணபதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க : சங்கராபுரம் பட்டாசு கடை தீ விபத்திற்கு காரணம் என்ன?

Last Updated : Oct 28, 2021, 12:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details