தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்.. நீச்சல் அடித்து தப்பிய இருவர்... ஓட்டுநர் கதி என்ன? - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்

திருக்கோவிலூர் அருகே தரைப் பாலத்தை கடக்கும்போது மழை வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காருக்குள் இருந்த இருவர் நீச்சல் அடித்து தப்பித்து கரைசேர்ந்துவிட்டனர். மாயமான ஒட்டுநரை தேடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

திருக்கோவிலூர் அருகே வெள்ளத்தின் போது பாலத்தை காரில் சென்று கடக்க முயற்சித்த நபர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதையடுத்து அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரை தேடும் பணி தீவிரம்

By

Published : Nov 30, 2021, 5:19 PM IST

Updated : Nov 30, 2021, 6:14 PM IST

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் கிளியூரைச் சேர்ந்த கிளியான், சங்கர், முருகன் ஆகிய மூவரும் அதே ஊரைச் சேர்ந்தவரின் வீட்டு துக்க நிகழ்விற்கு பெங்களூருவிலிருந்து வரும் உறவினர்களை அழைத்து வருவதற்காக முருகன் என்பவரது காரில் இரவு 9.30 மணி அளவிற்கு திருக்கோவிலூர் சென்றுள்ளனர்.

அப்போது மொகலார் கிராமத்திற்கு அருகில் உள்ள கெடிலம் தரைப்பாலத்தில் வெள்ள நீர் அதிகமாகச் சென்றுள்ளது. அப்போது அங்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் ஆற்றில் நீர் அதிகமாக வருகிறது, ஆகையால் மேலும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் காரில் வந்தவர்கள் மது போதையில் இருந்ததால் மூவரும் பாலத்தை கடந்துள்ளனர். இதனால் மூவரும் காருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் சங்கர் என்பவர் மட்டும் அப்பகுதியில் மீன் பிடித்தவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். இதன் பின்னர் கிளியானும் கரை ஏறியுள்ளார்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரை தேடும் பணி தீவிரம்

ஆனால் முருகனை மட்டும் காணவில்லை. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவரை காவலர்கள் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கனமழை: பெருக்கெடுத்தோடும் வெள்ளம்... போக்குவரத்து பாதிப்பு

Last Updated : Nov 30, 2021, 6:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details