தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார் மீது அரசுப்பேருந்து உரசி விபத்து - தாசில்தார் படுகாயம் - கள்ளக்குறிச்சி கார் விபத்து

உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது அரசுப்பேருந்து உரசியதில், தடுப்புக்கட்டையில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

car bus accident near uluntherpettai  car accident  accident  bus accident  kallakkurichi car bus accident  kallakurichi news  kallakurichi latest news  கள்ளக்குறிச்சி விபத்து  விபத்து  விபத்து செய்திகள்  வாகன விபத்து  சாலை விபத்து  கள்ளக்குறிச்சி கார் விபத்து  கார் மீது பேருந்து மோதி விபத்து
விபத்து

By

Published : Aug 22, 2021, 9:25 PM IST

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் பேருந்து நிலையம் அருகில் கார் மீது அரசுப்பேருந்து உரசியதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் உள்ள தடுப்புக்கட்டையில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

காரை ஓட்டி வந்த சங்கராபுரம் தாசில்தார் பாண்டியனுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, படுகாயமடைந்த தாசில்தாரை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கார் மீது அரசுப் பேருந்து உரசி விபத்து ...

இந்த விபத்தினால் 30 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் விபத்தில் சிக்கிக்கொண்ட வாகனத்தை அப்புறப்படுத்தினர்.

இதையடுத்து போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: ராமாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் தரமற்று கட்டப்பட்டிருப்பதாகப் புகார்

ABOUT THE AUTHOR

...view details