தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொங்கு நாடு பிரிக்க வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு - கார்த்தியாயினி - BJP district executive committee meeting in kallakurichi

கொங்கு நாடு பிரிக்கப்பட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு என பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி தெரிவித்துள்ளார்.

bjp-district-executive-committee-meeting-in-kallakurichi
bjp-district-executive-committee-meeting-in-kallakurichi

By

Published : Jul 12, 2021, 7:34 AM IST

கள்ளக்குறிச்சி : மாடூர் கிராமத்தில் பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் கார்த்தியாயினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கூட்டத்தில் சங்கராபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அமைக்க வேண்டும் , கல்வராயன்மலை பகுதியில் பதப்படுத்தும் நிலையம் அமைக்க வேண்டும், கள்ளக்குறிச்சி - சின்னசேலம் இடையே ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய கார்த்தியாயினி, "கொங்கு நாடு என்பது பொதுமக்கள் எதிர்பார்க்கும் விஷயம். தமிழ்நாட்டில் கொங்கு மக்கள் அதிகம் இருக்கும் பகுதியில் கொங்கு நாடு கொண்டு வரலாம் என பொதுமக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களின் கருத்து தான் செய்திகளாக வருகின்றன" என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 7.50 கோடி பரிசு வென்ற அமெரிக்க வாழ் தமிழ்நாட்டு விஞ்ஞானி!

ABOUT THE AUTHOR

...view details