கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் வாரம்தோறும் புதன்கிழமையன்று வாரச் சந்தை நடைபெறும். வழக்கமாக சந்தையில் 25 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே ஆடுகள் விற்பனை ஆகும்.
இந்த நிலையில் வரும் ஜூலை 21ஆம் தேதி பக்ரீத் பண்டிகை வருவதையொட்டி ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. அதன்படி, இன்று (ஜூலை.14) காலை ஏழு மணிக்கு தொடங்கிய சந்தையில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.