தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

4ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட உதவி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது - கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல்நிலையம்

கள்ளக்குறிச்சி அருகே 4ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உதவி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

போக்சோவில் கைது
போக்சோவில் கைது

By

Published : Apr 1, 2022, 11:06 PM IST

கள்ளக்குறிச்சி அருகே அரசு தொடக்கப்பள்ளியில் 4ஆம் வகுப்பில் படித்து வந்த மாணவி ஒருவருக்கு, அதே பள்ளியில் பணியாற்றி வரும் உதவி தலைமை ஆசிரியர் துளசிராமன் (59) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து, அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பள்ளிக்கு விடுமுறை விண்ணப்பம் அளிக்க இன்று (ஏப்.1) மாணவி சென்றுள்ளார். அப்போது 4ஆம் வகுப்பு பள்ளி மாணவியிடம், உதவி தலைமை ஆசிரியர் துளசிராமன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுதாக கூறப்படுகின்றது.

போக்சோவில் கைது

இதனையடுத்து அந்த மாணவி அழுதபடி‌ அவரது பெற்றோரிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். இதனை அறிந்து ஆத்திரமடைந்த மாணவியின் தாய் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து பெறப்பட்ட புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய‌ ஆய்வாளர் புவனேஸ்வரி ‌மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

போக்சோவில் கைது: அப்போது விசாரணையில், ஏற்கெனவே அந்தப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் துளசிராமன் இதேபோல் சில மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதை அறிந்த அனைத்து மகளிர் காவல் நிலையம் உதவி தலைமை ஆசிரியர் துளசிராமன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

நான்காம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு உதவி தலைமையாசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஊழல் செய்த அரசு அலுவலரின் வேலைக்கு ஆப்பு வைத்த ஆட்சியர் - பொதுமக்கள் பெரும் வரவேற்பு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details