தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. பொதுமக்களைக் கடந்து களப்பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர், சுகாதாரப் பணியாளர்கள் எனப் பல்வேறு தரப்பினர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் கோயம்புத்தூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.