கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட அம்மா முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டம், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அம்மாவட்டத்தின் தெற்கு மாவட்ட கழகச்செயலாளர் கோமுகிமணியன் தலைமையில் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியில் அமமுக ஆலோசனைக் கூட்டம் - அமமுக
கள்ளக்குறிச்சி: தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டமும், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கழக துணைப் பொதுச்செயலாளரும் தருமபுரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளருமான பி. பழனியப்பன் கலந்துகொண்டு கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் ராஜாமணி, மாவட்ட அவைத்தலைவர் மானக்ஷா, கள்ளக்குறிச்சி நகரச் செயலாளர் ஜெயப்பிரகாஷ், கள்ளக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் மசூதனன், சங்கராபுரம் ஒன்றியச் செயலாளர் மாயா வேலாயுதம், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.