கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (58), மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர் ஆலோசனைப்படி மேல் சிகிச்சைக்காக எலவனாசூர்கோட்டை பகுதி ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் தனியார் மருத்துவமனைக்கு அவரை உறவினர்கள் அழைத்துச் சென்றனர்.
உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் அடுத்த கோட்டை அடுத்த செம்பியன் மாதேவி பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனம் வேகமாக சென்றது. அப்போது, முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பிரேக் பிடித்துள்ளார். இதில், கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.