தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அம்பேத்கர் படம் அவமதிப்பு: காவல் நிலையத்தில் விசிக புகார் - Ambedkar's Portrait insult in uluntherpettai

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி சுற்றுச்சுவரில் இருந்த சட்டமேதை அம்பேத்கர் படம் மீது சாணம் பூசி அவமதித்தவர்களைக் கைதுசெய்ய வலியுறுத்தி, விசிக சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Ambedkar's Portrait
Ambedkar's Portrait

By

Published : Mar 13, 2020, 11:34 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டைக்குள்பட்ட உளுந்தாண்டர்கோவில் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் சார்பாக இந்தப் பள்ளியின் சுற்றுச் சுவரில் தேசிய தலைவர்களின் படங்கள் வரையப்பட்டுள்ளன. அதில் சட்டமேதை அம்பேத்கர் படமும் அடங்கும்.

இந்நிலையில் சில சமூக விரோதிகள், அம்பேத்கர் படத்தின் மீது சாணி, சேற்றை வாரி இறைத்தும் படத்தைச் சுரண்டுவதும் போன்ற செயல்களில் அவ்வப்போது ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவும் அம்பேத்கர் படத்தின் மீது சாணத்தைப் பூசி அவமதிப்பு செய்துள்ளனர்.

Ambedkar's Portrait

இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்தக்கோரியும், இந்தச் செயல்களில் ஈடுபட்ட சமூக விரோதிகளைக் கைது செய்யக்கோரியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காங்கிரஸ் ஆட்சியிலேயே 75% கலவரங்கள் நடைபெற்றுள்ளன - அமித் ஷா

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details