கள்ளக்குறிச்சி:கனியாமூர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 13ஆம் தேதி பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜூலை 17ஆம் தேதி பள்ளி வளாகத்திற்கு முன்பு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில் போராட்டக்கார்கள் பள்ளியின் பேருந்துகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், வாகனங்கள் சேதப்படுத்தினர்.
இந்த கலவர சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் சிபிசிஐடியினர் விசாரணையை தொடங்கினர். அதனால் 67 நாள்களாக பள்ளி வளாகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படாமல் இருந்து வந்ததது. தற்போது வழக்கு விசாரணை முடியும் தருவாயில் உள்ளதால், பள்ளியில் சீரமைப்பு பணிகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.