தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி விடுதி மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை - போலீஸ் விசாரணை - Suicide of a 12th student who pvt school hostel near Chinnasalem

சின்னசேலம் அருகே தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்த 12ஆம் வகுப்பு மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை
தற்கொலை

By

Published : Jul 13, 2022, 3:05 PM IST

கள்ளக்குறிச்சி:சின்னசேலம் அருகே கனியாமூரிலுள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி பயின்று வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படித்த ஸ்ரீமதி என்ற பள்ளி மாணவி இன்று (ஜூலை 13) அதிகாலை விடுதியின் 2ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த சின்னசேலம் காவல் ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பள்ளி மாணவியின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வை தருவதில்லை

இந்நிலையில், தங்களின் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் இது குறித்து காவல் துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உயிரிழந்த பள்ளி மாணவியின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து விடுதியில் தங்கி பயின்ற மற்ற மாணவ-மாணவிகளை அவர்களின் பெற்றோர் மூலம் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க: 24ஆவது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details