தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் உணவகத்தில் ரூ.5 லட்சம் திருட்டு: சிசிடிவியால் சிக்கியவருக்கு சிறை! - உணவகத்தில் ரூ.5 லட்சம் திருட்டு

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகேவுள்ள தனியார் உணவகத்தில் 5 லட்சம் ரூபாய் பணத்தை திருடிய நபரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளி
கைது செய்யப்பட்ட குற்றவாளி

By

Published : Jan 12, 2021, 1:49 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடி அருகே பிரபல தனியார் அசைவ உணவகம் இயங்கிவருகிறது. இங்கு, நேற்றிரவு (ஜன.11) நேரத்தில் உணவகத்தின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் 5 லட்சம் ரூபாய், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ருள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த உளுந்தூர்பேட்டை ஆய்வாளர் ரவிச்சந்திரன், தனிப்படை அமைத்து உணவகத்திலுள்ள கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும், செல்போன்களை வைத்தும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, புதுச்சேரி தனியார் விடுதியில் தங்கியிருந்த திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா பத்மநிதி கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்கின்ற காளிதாஸ் என்பவரை காவல் துறையினர் கைது செய்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் கொண்டு வந்து விசாரணை செய்தனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளி

விசாரணையில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 5 லட்சம் ரூபாய் பணத்தை திருடியதை ஒப்புக் கொண்டதையடுத்து அவரிடமிருந்து ஐந்து லட்ச ரூபாய் பணம், ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அவரை கைது செய்த காவல் துறையினர், சிறையில் அடைத்தனர். இவர், தொடர் திருட்டில் ஈடுபட்டு பல்வேறு வழக்குகளில் அடிக்கடி சிறைக்குச் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அடுத்தடுத்து 2 செல்போன்களைத் திருடிய இளைஞருக்கு வலைவீச்சு

ABOUT THE AUTHOR

...view details