தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளச்சாராயம் குடித்த நபர் மாரடைப்பால் உயிரிழப்பு! - கள்ளச்சாராயம் விற்பனை குறித்து விசாரணை

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலை பகுதியில் விற்ற கள்ளச்சாராயத்தை குடித்த குறி சொல்லுபவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

கள்ளச்சாராயம் குடித்த நபர் மாரடைப்பால் உயிரிழப்பு!
Illegal liquor sales in kallakuruchi

By

Published : Oct 31, 2020, 5:20 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் கள்ளச்சாரயத்தை முற்றிலும் ஒழிப்பதற்காக காவல் துறையினர் வாரந்தோறும் அப்பகுதியில் சோதனை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், சேலம் மாவட்டம் சீரிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சமுத்திரம் என்பவரது மகன் சங்கர் என்பவர் குறிசொல்லும் பணி செய்துவருகின்றார். கல்வராயன்மலை, கொட்டப்புதூர் கிராமத்தில் கடந்த இரு தினங்களாக குடுகுடுப்பு அடித்துக் குறிசொல்லி வந்துள்ளார்.

இவர், கல்வராயன்மலை பகுதியில் விற்கப்பட்டு வரும் கள்ளச்சாராயத்தை அளவுக்கு அதிகமாக அருந்தியதால் மாரடைப்பு ஏற்பட்டு இன்று (அக்.31) காலை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும், கல்வராயன்மலை பகுதியில் தொடர்ந்து வனத் துறை, காவல் துறை உதவியுடன் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்றுவருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியோவுல் ஹக் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details