கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி அந்த பள்ளியில் பயின்ற மாணவி மரணத்தைத் தொடர்ந்து கலவரத்துக்கு உள்ளாது. அதன் காரணமாக பள்ளி கட்டடம், பொருட்கள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அந்த பள்ளி 3 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பள்ளியை அரசே ஏற்று நடத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் ரவி தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், இந்த பள்ளியில் 2004ஆம் ஆண்டு ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பள்ளிக்கு வெளியில் நிறுத்தப்பட்டதால் பெரிய அளவில் போராட்டங்கள் நடத்துள்ளன. அப்போதே பள்ளி நிர்வாகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுத்திருந்தால் ஶ்ரீமதி மரண சம்பவம் நிகழ்ந்திருக்காது.