கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ரகுநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரகுரு. இவர் தனக்கு சொந்தமான இடத்தில் சோப்பு கம்பெனி வைத்து நடத்திவந்தார்.
அந்த கம்பெனி சரிவர வைக்கப்பட முடியாத நிலையில் அவர் விழுப்புரத்தைச் சேர்ந்த கில்லி சுகர்ணா என்பவரிடம் வாடகைக்கு விட்டுள்ளார். இந்த நிலையில் கில்லி சுகர்ணா அந்தக் கட்டடத்தில் வியாபாரம் செய்வதாக கூறி வாடகைக்கு எடுத்திருந்த நிலையில் இன்று அதிகாலை அந்தப் பகுதியிலிருந்து ரேஷன் அரிசி லாரிகள் மூலம் ஆந்திர மாநிலத்திற்கு கடத்தப்பட்டுவருவதாக காவல் துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் உளுந்தூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் அகிலன் தலைமையில் தனிப்படை காவல் துறையினர் ரகுநாதபுரம் கிராமப் பகுதியில் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள சோப்பு கம்பெனியிலிருந்து ஒரு லாரி வெளியே வந்தது. லாரியை மடக்கி நிறுத்திய காவல் துறையினர் காரில் இருந்த பொருள்களை ஆய்வு செய்தனர்.