தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உரிமமின்றி நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்த 4 பேர் கைது

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே உரிமமின்றி நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

நாட்டுத் துப்பாக்கிகள்
நாட்டுத் துப்பாக்கிகள்

By

Published : Sep 22, 2020, 9:31 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்து எலவனாசூர்கோட்டை பகுதியில் உரிமம் இல்லாமல் நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து துப்பாக்கி வைத்திருந்தவர்களை தேடிவந்தனர். இதில் எறையூர் கிராமத்தைச் சேர்ந்த அருள் ஜோசப், இருதய பவுல்ராஜ், குழந்தைசாமி, நாட்டுத் துப்பாக்கிகள் தயார் செய்து விற்பனை செய்த சின்னசேலம் அருகே உள்ள நாக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பின் அவர்களிடமிருந்து 4 நாட்டுத் துப்பாக்கிகள், இரு சக்கர வாகனங்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து ஒப்படைத்தால் நல்லது இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details