கள்ளக்குறிச்சிஅருகே தனியார்ப் பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி இறந்ததை அடுத்து பெற்றோர் உடலை வாங்க மறுத்துப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 17ஆம் தேதி இந்தப்போராட்டம் கலவரமாக மாறி ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மாணவி படித்த பள்ளிக்குள் புகுந்து வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர்.போலீஸ் வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். பள்ளி அலுவலக கட்டடங்களுக்குத் தீ வைத்தனர்.
இதில் ஏராளமான போலீசாருக்கும் காயமும் ஏற்பட்டது. இந்தக் கலவரத்திற்கு முக்கியக்காரணம் வாட்ஸ்அப் மூலம் ஆட்களை ஒன்று திரட்டி இளைஞர் பங்கேற்றது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் அதனைத்தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்குப் போலீஸ் பாதுகாப்புத்தொடர்ந்து போடப்பட்டு வருகிறது. மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு வாட்ஸ்-அப் மூலம் ஆட்களை ஒன்று திரட்டிப்போராட்டம் நடத்த முயற்சி செய்வதாக தகவல் பரவியது.
இதனையடுத்து அந்தந்த மாவட்ட போலீசார் சமூக வலைதளங்களையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள கிராமத்தைச்சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு வாட்ஸ்-அப் மூலம் ஆட்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த முயற்சித்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது பற்றிய விவரம் வருமாறு:ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த சின்னாக்கண்டனூரைச்சேர்ந்தவர் ஸ்ரீதர். கட்டட மேஸ்திரி. அதே பகுதியைச்சேர்ந்தவர் அசோக், பிளஸ் - 2 படித்துவிட்டு கடந்த ஒரு ஆண்டாக கூலி வேலைப் பார்த்து வருகிறார். இருவரும் நண்பர்கள். எந்த நேரமும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்தனர்.