தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உளுந்தூர்பேட்டையில் ரூ. 2.83 லட்சம் ரூபாய் பறிமுதல்! - kallakurichi latest news

உளுந்தூர்பேட்டை அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 2 லட்சத்து 83 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

2 லட்சம் ரூபாய் பறிமுதல்
2 லட்சம் ரூபாய் பறிமுதல்

By

Published : Mar 10, 2021, 12:18 PM IST

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் தலைமையில் நேற்றிரவு(மார்ச்.09) வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சென்னையிலிருந்து நாமக்கல் நோக்கிச் சென்ற மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், கணக்கில் வராத 2 லட்சத்து 83 ஆயிரத்து 650 ரூபாய் பணம் கொண்டு சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து அவற்றைக் கைப்பற்றி, உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் கோபாலகிருஷணனிடம், பறக்கும்படை அலுவலர்கள் ஒப்படைத்தனர். தொடர்ந்து வாகன ஓட்டுநர் நாமக்கல்லிலிருந்து சென்னைக்கு முட்டை விற்பனை செய்து அதனுடைய பணத்தை எடுத்து சென்றதாக தெரிவித்தார். இருப்பினும், உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் இதுதொடர்பாக அரசு அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:காஞ்சிபுரத்தில் ரூ.2.31 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும்படை

ABOUT THE AUTHOR

...view details