கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் அதிவேகமாக சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த வேன் மீது மோதியது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த 8 பேரும், காரில் பயணம் செய்த செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 2 பேரும் படுகாயமடைந்தனர்.
வேன் மீது கார் மோதி விபத்து இதுகுறித்து தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த உளுந்தூர்பேட்டை காவல்துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தற்போது விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: தனுஷ்கோடி சென்ற பேருந்தை நடத்துனர் இயக்கியதால் விபத்து