தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’ஜீரோ டிஸ்சார்ஜ்’ முறையில் செயல்பட நடவடிக்கை - கருப்பணன்

ஈரோடு: திருப்பூரைப் போல ’ஜீரோ டிஸ்ஜார்ஜ்’ முறையில் ஈரோட்டிலும் சாயத் தொழிற்சாலைகள் செயல்பட மத்திய, மாநில அரசுகள் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.

zero
zero

By

Published : Jan 22, 2020, 6:02 PM IST

திருப்பூரை போல ஜீரோ டிஸ்ஜார்ஜ் முறையில் ஈரோட்டிலும் சாய தொழிற்சாலைகள் செயல்பட மத்திய, மாநில அரசுகள் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் ஈரோடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த முகாமினை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

அமைச்சர் கருப்பணன்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருப்பண்ணன், ’மக்களை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம். 'பி கிரேடு' தொழிற்சாலைகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதியும், மக்கள் கருத்தும் தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருந்தாலும், சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டியுள்ளது.

திருப்பூரைப் போல ”ஜீரோ டிஸ்ஜார்ஜ்” முறையில் ஈரோட்டிலும் சாய தொழிற்சாலைகள் செயல்பட மத்திய, மாநில அரசுகள் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.” என்றார்.

இதையும் படிங்க: கிராம சபைக் கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details