ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட சிங்கிரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர், அரசு மதுபான குடோனில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றிவருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தற்போது கரோனா தாக்குதல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வீட்டில் இருந்த சிவக்குமாருக்கு ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவம் சமைக்க தோன்றியுள்ளது. இதையடுத்து, அவர் தனது உறவினர்களான சக்திவேல், ராமசாமி, மணிகண்டன், அரிகரகாந்த், சுபாஷ்சந்திரபோஸ், யோகேஸ்வரன் ஆகிய ஏழு பேரும் சேர்ந்து அதிகாலையில் காசிபாளையம் பகுதியில் செல்லும் பவானி ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
கிருஷ்ணமூர்த்தி என்ற விவசாயி குத்தகைக்கு சாகுபடி செய்யும் வாழைத்தோட்டத்தின் வழியாக பவானி ஆற்றுக்குச்சென்றவர்கள் ஆற்றில் இறங்கி மீன்களை டார்ச்வெளிச்சத்தில் கத்தியில் வெட்டி பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிவக்குமார் மட்டும் வேறு இடத்திற்கு சென்று மீன்களை பிடிக்க வாழைத்தோட்டத்தின் பக்கவாட்டில் சென்றபோது வாழைகளை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த சோலார் மின்வேலியில் சிக்கி அலறியுள்ளார்.