ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தம்பதிக்கு 17 வயதில் மகள் உள்ளார், பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது மகள் வீட்டில் இல்லாததால் உறவினர் வீடு உட்பட பல இடங்களில் தேடியுள்ளனர்.
இது குறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் விசாரணையில் கடம்பூர் மலை பகுதியை சேர்ந்த வாலிபர் வீட்டில் தனியாக இருந்த அச்சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது.