ஈரோடு அருகேயுள்ள முத்துக்கவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் தனது மனைவியுடன் வசித்துவந்தார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளன. பிரபு அடிக்கடி அப்பகுதியில் உள்ளவர்களிடம் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.
அதேபோல், நேற்று முன்தினம் அவர் தனது அண்டை வீட்டுக்காரரிடம் தகராறில் ஈடுபட்ட நிலையில் அண்டை வீட்டுக்காரர் பிரபுவை அடித்துக் கொலைசெய்து ஊருக்கு வெளியே உள்ள கிணற்றில் வீசியதாகக் கூறப்படுகிறது.