விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வ.புதுப்பட்டி இந்திரா காலணி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று வெடிச்சத்தம் கேட்டுள்ளது.
வீட்டில் நாட்டுவெடிகுண்டு தயாரித்த இளைஞர் கைது - country bomb
விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
youth
இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் சம்பவஇடத்துக்கு வந்த காவல்துறையினர், வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, தங்கேஸ்வரன் என்ற இளைஞர் அனுமதியின்றி நாட்டு வெடிகுண்டு தயாரித்தும், அது தயாரிப்பின் போது எதிர்பாராத விதமாக வெடித்தும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அவரை கைது செய்த காவல்துறையினர், நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.