தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்லூரி மாணவியை காரில் கடத்தி தாலி கட்டிய இளைஞர் கைது - College student abducted

திங்களூர் அருகே கல்லூரி மாணவியை காரில் கடத்தி தாலி கட்டிய இளைஞர் உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கல்லூரி மாணவியை கடத்தி கட்டாய திருமணம்: 3 இளைஞர்கள் கைது
கல்லூரி மாணவியை கடத்தி கட்டாய திருமணம்: 3 இளைஞர்கள் கைது

By

Published : May 25, 2022, 11:10 AM IST

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள திங்களூர் கருக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் என்பவரின் மகள் காந்திமதி. இவர் சித்தோட்டில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். வழக்கம்போல காந்திமதி கல்லூரிக்கு செல்ல கருக்கம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக காரில் வந்த நிச்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் தமிழரசன், ராஜ் ஆகியோர் காந்திமதியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக்கொண்டு நிச்சாம்பாளையத்தில் உள்ள தேவராஜின் வீட்டிற்கு சென்றனர். வீட்டில் காந்திமதிக்கு தேவராஜ் வலுகட்டாயமாக தாலி கட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து காந்திமதி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திங்களூர் காவல் துறையினர் தேவராஜ் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கல்லூரி மாணவியை கடத்தி சென்று வலுக்கட்டாயமாக தாலி கட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:வரதட்சணை கொடுமை செய்ததால் பெண் தற்கொலை: கணவன் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details