ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடியைச் சேர்ந்த இருதயராஜ் மகன் ஜீவா(20). இவர் இன்று(ஏப்.29) தாளவாடி அடுத்த மெட்டல்வாடியில் தனது நண்பர்கள் ஆறு பேருடன் சேர்ந்து அங்குள்ள செயல்படாத கல்குவாரியில் குளிக்க சென்றுள்ளனர். நீண்ட நாள்களாக செயல்படாத கல்குழியில் அண்மையில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கியுள்ளது. கல்குழியில் உள்ள ஆழம் தெரியாமல் 20 அடி உயரமான பாறை மீது ஏறி குதித்துள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற ஜீவா நீரில் மூழ்கியுள்ளார்.
கல்குவாரி குட்டையில் குளித்த இளைஞர் உயிரிழப்பு - Youngster died
தாளவாடி அடுத்த மெட்டல்வாடி கல்குவாரி கல்குழியில் குளித்த ஜீவா என்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
![கல்குவாரி குட்டையில் குளித்த இளைஞர் உயிரிழப்பு Youth died](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:41:27:1619705487-tn-erd-05-sathy-drowning-death-photo-tn10009-29042021192953-2904f-1619704793-346.jpg)
Youth died
இதை பார்த்து நண்பர்கள் நீரில் மூழ்கி மாயமான ஜீவாவை காப்பாற்ற முயற்சித்தும் பலனளிக்காததால் ஆசனூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின் பாறைகளுக்கு இடையே சிக்கிய ஜீவாவின் உடலை மீட்டனர்.
அதனைத் தொடர்ந்து ஜீவா உடல், சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தாளவாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.