ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேட்டைகாரன்கோயில் வாய்க்கால்மேடு பேருந்து நிறுத்தம் அருகில் புளியமரத்தடியில் ஒரு இளைஞரின் சடலம் ரத்த காயங்களுடன் தலையில் தாக்கப்பட்டு சடலமாக கிடந்தது. இதனை அருகில் உள்ள இறைச்சிக்கடைக்கு கோழி இறக்குமதி செய்யவந்த நபர்கள் பார்த்து கோபிசெட்டிபாளையம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இறந்து கிடப்பவரின் அடையாளங்களை சேகரித்தபோது, அதேப் பகுதியில் இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் தொழிற்கூடம் நடத்திவரும் மயில்சாமி (21) என்பது தெரியவந்தது. மயில்சாமி தாக்கப்பட்டு அடையாளம் தெரியாத நபர்கள் படுகொலை செய்யபட்டுள்ளதை காவல் துறையினர் உறுதி செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஈரோட்டிலிருந்து மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டு குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மோப்பநாய் வீரா வாய்க்கால்மேடு பகுதியில் உள்ளி வீதிகளில் சென்று யாரையும் கவ்விப்பிடிக்காமல் திரும்பியது.