ஈரோடு:அரச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் பெருந்துறை அருகேவுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று (மே 26) வழக்கம்போல் அவர் அரச்சலூரில் ஊரிலுள்ள அவரது வீட்டிலிருந்து கிளம்பி வேலைக்குச்சென்று கொண்டிருந்தார்.
அப்போது பெருந்துறை ஆர்எஸ் அருகே சென்றபோது திடீரென தனது இருசக்கரவாகனத்தில் கொண்டுவந்த பெட்ரோலை எடுத்து ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படுகிறது. இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் வெள்ளோடு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.