ஈரோடுமாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி 12ஆம் வகுப்பு முடித்துள்ளார். இவர் 2020ஆம் ஆண்டு கரோனா காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். ஆன்லைன் என்பதால் ஸ்மார்ட் போனை பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது ஷேர்சாட் என்ற செயலின் மூலம் கோவையைச் சேர்ந்த ஜேசுதாஸ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்பின்னர் அடிக்கடி இருவரும் செல்போனில் பேசிப் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ஆம் தேதி அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது ஜேசுதாஸ் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது ஜேசுதாஸ், அப்பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தைக் கூறி மாணவியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
தொடர்ந்து அவர் பல முறை மாணவியின் வீட்டிற்குச்சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இந்நிலையில் ஜேசுதாஸ் நடவடிக்கை பிடிக்காததால் மாணவி அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால், கடந்த சில நாள்களுக்கு முன்பு மாணவியின் தந்தை வாட்ஸ்அப் எண்ணிற்கு ஜேசுதாஸ் ஒரு புகைப்படத்தை அனுப்பி இருந்தார். அதில் ஜேசுதாசும், மாணவியும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை அனுப்பி தனக்குப் பணம் தர வேண்டும் என்றும்; இல்லையென்றால் இந்தப் படத்தை சமூக வலைதளத்தில் அனுப்பிவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.