ஈரோடு மாவட்டம் வெண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி . இவரது மகன் மௌலி. இவர் காங்கேயத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். வாரம் ஒருமுறை வீட்டுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்த இவர், தந்தையிடம் வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
ஆனால், இவர் நான்கு நாட்களுக்கு மேலாகியும் வீடு திரும்பாததால் கடந்த 24ஆம் தேதி மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் மௌலியின் தந்தை புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் மௌலியை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை வெண்டிப்பாளையம் காலிங்கராயன் வாய்க்காலில் உடல் சிதைந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்ததையடுத்து, உடனடியாக காவல்துறையினர் வாய்க்காலில் கிடந்த சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.