ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தைச் சேர்ந்தவர் நவீன்(20). இவர் கடந்த 9ஆம் தேதி அந்தியூரிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் சத்தியமங்கலம் நோக்கிச் சென்றுள்ளார். சத்தியமங்கலம் காமதேனு கலைக்கல்லூரிக்கு அவர் சென்றுகொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தார். அதன்பின் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், விபத்தில் உயிரிழந்த நவீனின் பெற்றோர் மற்றும் கல்லூரி நண்பர்கள் சத்தியமங்கலம் பேருந்து நிலைய காவல்துறையினரை முற்றுகையிட்டு ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.