தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மைனர் பெண்ணை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது! - ஈரோட்டில் போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன்

ஈரோடு: தாளவாடி அருகே இளைஞர் ஒருவர் மைனர் பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளதால் காவல் துறையினர் அவரை போக்சோ சட்டத்தின் கிழ் கைது செய்துள்ளனர்.

போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன்

By

Published : Oct 24, 2019, 10:52 AM IST

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே உள்ள சூசையபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்தனிஸ்லாஸ் என்பவரது மகள் மரியஸ்நேகா (17). இவரும் அதே பகுதியில் வசிக்கும் இவரது உறவினர் லியோபிரசாந்த் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சேலம் மாவட்டம் கொளத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்று திருமணம் செய்துகொண்டு இருவரும் சூசையபுரம் வந்துள்ளனர். இவர்களது திருமணத்தை மரியஸ்நேகாவின் பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டனர். கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி லியோபிரசாந்த் காதலியின் வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பிவரவில்லை. லியோபிரசாந்த்தின் பெற்றோர் இத்திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிகிறது.

போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன்

இதனால், மரியஸ்நேகா காதல் கணவனுடன் சேர்த்து வைக்கக்கோரி கடந்த அக்டோபர் 20ஆம் தேதியன்று சூசையபுரம் பேருந்து நிலையத்தில் தனது குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்த தாளவாடி காவல் துறையினர் பெண் மைனர் என்பதால் சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தை அணுகி புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.

மரியஸ்நேகா குடும்பத்தினர் சத்தியமங்கலம் மகளிர் காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர். இதையடுத்து அனைத்து மகளிர் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து லியோபிரசாந்தை தேடி வந்தநிலையில் அவர் சூசையபுரத்தில் உள்ள தனது வீட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற காவல் துறையினர் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:'என்னைக் காதலிக்காவிட்டால் கொன்றுவிடுவேன்' - பெண்ணை கத்தியைக்காட்டி மிரட்டிய இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details