தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொத்து விவகாரம் - இளம் பெண் தற்கொலை! - young girl suicide in erode

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே சொத்து விவகாரம் தொடர்பாக இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளம் பெண் தற்கொலை
இளம் பெண் தற்கொலை

By

Published : Nov 25, 2020, 9:53 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திருநகர் காலனியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கும், இவரது மனைவி ஹேமலதாவுக்கும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிரதன்யா(2) என்ற மகள் உள்ளார். ஹேமலாதவின் தாய், தனது மனையை ஹேமலதாவுக்கும் வழங்காமல், மூத்த மகளுக்கு மட்டும் எழுதி கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் சிவக்குமார்- ஹேமலாதா தம்பதிக்கு தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் தினமும் வாக்குவாதம் நடைபெற்று வந்ததால் மனமுடைந்த ஹேமலாதா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் காவல்துறையினர் மற்றும் கோட்டாட்சியர் ஜெயராமன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details