ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து ஈரோட்டில் மஞ்சள் விற்பனை கூடங்களுக்கு தற்காலிகமாக விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது மே 3ஆத் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால் நேற்று (ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு) முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாட்டிலிருந்து முக்கியத் தொழில்களுக்கு தளர்வளிக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருந்தன.
இதில் ஈரோடு மாவட்டத்தின் முக்கியத் தொழிலான மஞ்சள் விற்பனைக்கு தளர்வு அளிக்கப்பட்டது. அரசின் தளர்வு அறிவிப்பைத் தொடர்ந்து மாவட்டத்திலுள்ள மஞ்சள் விற்பனைக் கூடங்களில், ஏலம் தொடங்கப்பட்டுள்ளது. ஏலம் தொடங்கியதையடுத்து ஈரோடு அருகேயுள்ள செம்மாம்பாளையம் மஞ்சள் விற்பனைக் கூடத்தில் ஆட்சியர் சி.கதிரவன் ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோட்டில் மஞ்சள் ஏலம் தொடக்கம் - ஆட்சியர் ஆய்வு! - ஊரடங்கு உத்தரவு
ஈரோடு: ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த மஞ்சள் விற்பனைக் கூடங்கள் அரசின் தளர்வு காரணமாக இன்று முதல் ஏலம் தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து ஆட்சியர் சி.கதிரவன் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, மஞ்சள் விற்பனைக் கூடங்களில் ஏலத்தின் போது மஞ்சள் வியாபாரிகள், விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய சமூக இடைவெளி, முகக் கவசம், எச்சில் துப்பக் கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விளக்கிக் கூறினார்.
மேலும், மஞ்சள் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள், மாவட்ட நிர்வாகத்தின் நோய்த்தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கி விலக்களிக்கப்பட்டுள்ள மஞ்சள் விற்பனையை சிறப்புடன் செய்திட வேண்டும் என்று ஆட்சியர் கதிரவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க:சரக்குகளைக் கையாள 'அனகோண்டா' ரயில் - இந்தியன் ரயில்வேயின் அசத்தல் அறிமுகம்