தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'10ஆம் வகுப்புத் தேர்வு எழுதினால் அனைவரும் பாஸ் தானா?' - அமைச்சர் செங்கோட்டையன் பதில்! - writion 10th exam students is all pass minister sengottaiyan answer

ஈரோடு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

sengottaiyan
sengottaiyan

By

Published : May 24, 2020, 5:31 PM IST

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'நீட் தேர்வுக்கான பயிற்சிகள் ஜூன் இரண்டாம் வாரத்திலிருந்து தொடங்கவுள்ளது.

ஏழாயிரத்து 300 மாணவர்களுக்கு ஒன்பது கல்லூரிகளில் 35 நாள்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டு நீட் தேர்வில் 100 அரசுப் பள்ளி மாணவர்களாவது வெற்றிபெற்று மருத்துவக் கல்லூரிக்குச் செல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன' என்றார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு ’மதிப்பெண்கள் வந்த பிறகு, அரசு கூர்ந்து கவனித்து நடவடிக்கை மேற்கொள்ளும்' எனப் பதிலளித்தார்.

இதையும் படிங்க:பொதுத்தேர்வை தள்ளிவைக்க வலியுறுத்தி முதலமைச்சருக்கு மாணவர் கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details