ஈரோடு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வன கால்நடை மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார் கே.அசோகன். அவர் இந்தியா அளவில் உள்ள ஒரே ஒரு பாம்பு அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். உலக பாம்புகள் தினத்தை முன்னிட்டு அழிந்து வரும் பாம்பினங்களை பாதுகாப்பு குறித்து அவர் என்ன கூறுகிறார் என்பது குறித்து கண்போம்.
வரலாறு:
பாம்பினங்கள் தோன்றி 13 கோடி ஆண்டுகள் ஆகின்றன என கூறப்படுகிறது. பல்லிகளில் இருந்து தான் பாம்புகள் பரிணாம வளர்ச்சி அடைந்ததாக பல ஆய்வின் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாம்புகளுக்கு அதிர்வலைகளை உணரும் சக்தி, நுகர்ந்து பார்க்கும் திறன் அதிகம்.
உலகம் முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட பாம்புகள் உள்ளன. அவை அண்டார்டிகா, ஐஸ்லாந்து, அயர்லாந்து, கிரீன்லாந்து மற்றும் நியூசிலாந்து உள்ளிடப்பகுதிகளைத் தவிர எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. சுமார் 600 இனங்கள் விஷத்தன்மை வாய்ந்தவை. அதில் 200 பாம்புகள் மட்டுமே மனிதனைக் கொல்லவோ அல்லது கணிசமாக காயப்படுத்தவோ கூடியவை. இந்தியாவைப் பொருத்துவரை 300க்கும் மேற்பட்டவை வகைப் பாம்புகள் உள்ளன.
தமிழ்நாட்டில் பாம்புகள்:
பண்டை காலத்தில் பாம்புகளை தெய்வமாக கருதினர். விவசாயத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த காலக்கட்டங்களில் நெற்பயிரைச் சேதப்படுத்திகூடிய எலிகளை கட்டுப்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டது. அதனால் எலிகளை உண்ண வரும் பாம்புகள் அடித்துக்கொல்லாமல் பாதுகாக்கப்பட்டன.
ஆனால் தற்போது அப்படி அல்ல. பாம்புகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டன. முன்பெல்லாம் சாலைகளில், வீட்டின் பின்பகுதிகள் என அடிக்கடி பாம்புகளை பார்த்திருப்போம். தற்போது அவை அரிதாகிவிட்டன. ஏனென்றால் நகர்மயமாக்கல், விவசாய நிலங்கள் அழிக்கப்படுதல் உள்ளிட்ட நாகரீக வளர்ச்சியால் பாம்புகள் அழிவை சந்தித்துவருகின்றன.
அவற்றின் வாழ்விடம் காணாமல் போய்விட்டது. அதனால் பாம்புகள் சாக்கடைகள், வீடுகள், வீதிகளில் திரிகின்றன. அதனால் மக்கள் அவற்றை அடித்து கொல்கின்றனர். பொதுவாக பாம்புகள் யாரையும் துரத்தி கடிக்காது. அவை செல்லும் வழியில் மனிதர்கள் அவற்றை சீண்டினால் மட்டுமே அவை தற்காத்துக்கொள்ள முதலில் நகர்ந்துதான் செல்லும். அதனை மிதித்தால், அடித்தால் மட்டுமே வலியால் கடிக்கும்.
பாம்புகளில் விஷதன்மை கொண்டவை நான்கு வகையான பாம்புகள் மட்டுமே. அவை நாகப்பாம்பு, கட்டுவிரியன், ராஜநாகன், கண்ணாடிவிரியன் உள்ளிட்டவை. மீதமுள்ள சாரை, பச்சை, தண்ணீர், கொம்பேரி நாகன் உள்ளிட்டவை விஷமில்லாத பாம்புகள். அந்த வகை பாம்புகளும் பயத்தாலும், அறியாமலும் கொல்லப்படுகின்றன.