தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலக செவிலியர் தினம் - முகம் கோணாத முகங்களுக்கு பாராட்டு! - World Nurses Day World Nurses Day Program at Erode Government Hospital

ஈரோடு: உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் உன்னதப் பணி மற்றும் முகம் கோணாத சேவைக்கு பாராட்டப்பட்டது.

காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் வாழ்த்துக்கள் அடங்கியவைகளை வழங்கும் காட்சி
காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் வாழ்த்துக்கள் அடங்கியவைகளை வழங்கும் காட்சி

By

Published : May 12, 2020, 2:18 PM IST

உலக செவிலியர் தினம் ஆண்டுதோறும் மே மாதம் 12ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த தினத்தின் போது செவிலியர்களின் தன்னலமற்ற உன்னதப்பணி மற்றும் முகம் கோணாத சேவைகளைப் பாராட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி மே மாதம் 12ஆம் தேதியான இன்று உலக செவிலியர் தினம் நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. கரோனா உள்ளிட்ட பேரிடர் காலங்களில் செவிலியர்களின் பணியும், சேவையும் தவிர்க்க முடியாதவை. சாதாரண நோய் பாதித்த நோயாளிகள் முதல் உயிர் எடுக்கும் நோய் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வரை அனைவரையும் ஒரே விதமாக பாவித்து முகம் சுலிக்காமல் அவர்களது தேவையைப் பூர்த்தி செய்து குணம் அடைய செய்வதில் செவிலியர்கள் பணி மருத்துவர்களின் உயிர் காக்கும் பணிக்கு ஈடானதாகும்.

செவிலியர்ளுடன் காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார்
மேலும் 24 மணி நேரமும் நோயாளிகளைப் பாதுகாத்திடும் பணியில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு, ஈரோடு அரசினர் தலைமை மருத்துவமனையில் செவிலியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மதுவிலக்குக் காவல் துறை காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவக்குமார் கலந்துகொண்டு மருத்துவமனையில் பணியாற்றும் அனைத்து செவிலியர்களையும் பாராட்டி பூங்கொத்துகளை வழங்கினார்.
செவிலியர்களின் பணியைப் பாராட்டி வாழ்த்துக்கள் அடங்கிய பரிசு
இதில் செவிலியர்களின் பணியைப் பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற பேரிடர் காலங்களில் செவிலியர்களின் பணி மிகவும் முக்கியமானதாகும் என்றும், தொடர்ந்து தங்களது பணியை, சேவையை ஆற்றி நோயாளிகளை பாதுகாத்திட வேண்டும் என்று மதுவிலக்கு காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் செவியர்களிடம் கேட்டுக் கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details