ஆண்டுதோறும் ஜூன் 7ஆம் தேதி உலக உணவு பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டுகிறது. இதனையொட்டி உணவு பழக்கத்தில் கடைப்பிடிக்கக்கூடிய வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பேரணியில் சென்றனர். இதனை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
உலக உணவு பாதுகாப்பு தினம்; விழிப்புணர்வுப் பேரணி - ஈரோடு
ஈரோடு: உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.

விழிப்புணர்வு பேரணி
உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
இந்த விழிப்புணர்வு பேரணி ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி காந்திஜி சாலை, காளை மாடு சிலை சந்திப்பு உள்ளிட்ட முக்கிய சாலைகளின் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.
இதில், ஏராளமான மாணவிகள் கலந்துகொண்டு பாதுகாப்பான உணவின் முக்கியத்துவத்தை உணர வேண்டும், பாதுகாப்பற்ற உணவு பொருட்களை எவ்வாறு கண்டறிவது உள்ளிட்ட வாசங்கங்கள் அடங்கிய பாததைகளை ஏந்தியபடி சென்றனர்.