தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுவர் முதல் பெண்கள் வரை அசத்திய பாரம்பரிய கும்மியாட்டம் - சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஒயிலாட்டம் நிகழ்ச்சியில் சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை இணைந்து அசத்தலாக ஒயிலாட்டம் ஆடினர்.

பாரம்பரிய கும்மியாட்டம்
பாரம்பரிய கும்மியாட்டம்

By

Published : May 15, 2022, 3:38 PM IST

ஈரோடு:சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 3ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடந்து வந்தன. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கும்மி மற்றும் ஒயிலாட்டம் ஆடும் நிகழ்ச்சி நடந்தது.

தமிழ்நாட்டின் நாட்டுப்புற கலைகளில் மிக முக்கிய கலையாக ஒயிலாட்டம் உள்ளது. இளம் தலைமுறையினர் தற்போது ஆர்வமாக இக்கலைகளை கற்றுக்கொண்டு வருகின்றனர். இக்கலையை, ஈரோடு உள்பட கிராமந்தோறும் கொண்டு சேர்க்கும் வகையில், கருமத்தம்பட்டி சங்கமம் ஒயிலாட்ட கலைக்குழு சார்பில் 5 வயது குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை தொடர்ந்து பல ஆண்டுகளாக பயிற்சியளித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒயிலாட்ட கலைஞர்களின் நிகழ்ச்சி மாரியம்மன் கோயில் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட ஒயிலாட்ட கலைஞர்கள் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டின் பாரம்பரிய கிராமிய ஒயிலாட்ட கலை பயிற்சி பெற்றவர்கள் குழுவினரின் இசை முழங்க, கூடி நின்று ஒயிலாட்டம் நடத்தியது கூடியிருந்தவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

பாரம்பரிய கும்மியாட்டம்

கிராமிய கலை குறித்து ஒயிலாட்டம் ஆடி, இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இதில் ஒயிலாட்ட கலைக்குழுவின் நாட்டுப்புற பாடல்கள் இசையுடன் சிறுவர், சிறுமியர் முதல் பெரியவர் வரை, உற்சாகத்துடன் நடனமாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இசைக்கு ஏற்றவாறு சிறுவர், சிறுமியர் முதல் பெரியவர் வரை ஒயிலாட்டம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதையும் படிங்க:வேப்பிலை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

ABOUT THE AUTHOR

...view details