தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பவானி கூடுதுறை ஆற்றில் குதித்த பெண் மீட்பு! - ஈரோடு பவானி ஆற்றில் குதித்த பெண்

ஈரோடு: பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் ஆலையம் அருகே உள்ள பவானி ஆற்றில் குதித்த பெண் பரிசல் ஓட்டியின் உதவியுடன் மீட்கப்பட்டார்.

ஆற்றில் விழுந்த பெண் மீட்பு
ஆற்றில் விழுந்த பெண் மீட்பு

By

Published : Dec 6, 2019, 11:55 AM IST

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள ஒரிச்சேரி புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன்-சம்பூர்ணம் தம்பதி. சம்பூர்ணம் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் அருகே உள்ள பாவனி ஆற்றின் பலம் பகுதியில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சம்பூர்ணம் திடீரென பவானி ஆற்றில் குதித்தார். இதனை கண்ட பொதுமக்கள் கூச்சலிட்டுள்ளனர். இதனையடுத்து ஆற்றில் அடித்துவரப்பட்ட சம்பூர்ணம் பரிசல் ஓட்டியின் உதவியுடன் ஆற்றின் நடுப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டார்.

ஆற்றில் விழுந்த பெண்ணை மீட்கும் காட்சி

பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பவானி நகர காவல் துறையினர் சம்பூர்ணத்தை மீட்டு அவசர ஊர்தியின் மூலமாக பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

மேலும், சம்பூர்ணம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றாரா அல்லது ஆற்று பாலத்தில் நடந்து வரும் போது தவறி விழுத்தாரா என்பது குறித்து அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மேற்கு வங்கத்திலும் ஹைதராபாத் சம்பவம்! - பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

ABOUT THE AUTHOR

...view details