ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வடுகபாளையத்தில் கருப்பாயாள் என்கிற மயிலாத்தாள் வசித்து வருகிறார். இவர் தனது விவசாயத் தோட்டத்தில், முல்லைப்பூ செடி வளர்த்து வருகிறார்.
இதனையடுத்து முல்லைப் பூ, பறிக்க கருப்பாயாள் தோட்டத்திற்குச் சென்ற போது, முல்லைப் பூ செடி மீது மின் மோட்டாருக்குச் செல்லும் மின் கம்பி அறுந்து கிடந்துள்ளது. அதனை கருப்பாயாள் வெறும் கையால், செடியில் இருந்து அப்பறப்படுத்த முயற்சிக்க, மின்சாரம் தாக்கியது. இதில் கருப்பாயாள் நிகழ்விடத்திலேயே பரிதபமாக உயிரிழந்தார்.